இரண்டு பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது..!

க.கிஷாந்தன்-
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ஜீன் தோட்டத்தில் 2007ஆம் ஆண்டு 04 மாதம் 21ம் திகதி இடம்பெற்ற ஒருவரின் கொலையுடன் தொடா்புடைய 2 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க 02.12.2015 அன்று மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தார்.

2007ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து நடத்திய விசாரணைகளின் பின்னரே இவ்வாறு தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலையுடன் தொடா்புடைய 3 பேர் குற்றாவாளிகளாக இனம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலையுடன் தொடா்புடைய 3 சந்தேக நபா்களில் ஒருவா் மரணமடைந்துள்ளதாகவும் 02.12.2015 அன்று ஆஜராகியிருந்த எல்ஜீன் தோட்டத்தை சேர்ந்த இராஜேந்திரன் ரஜினிகாந்த் (வயது 31), பன்னீர்செல்வம் தியாகராஜா (வயது 29) ஆகிய இரண்டு பேருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்பளிக்கப்பட்டது.

மேற்படி சந்தேக நபா்கள் எல்ஜீன் தோட்டத்தில் உள்ள சுப்பையா முருகையா என்பவரை தனிப்பட்ட பிரச்சினை காரணமாக அடித்து கொலை செய்துள்ளனர்.

இதனாலேயே இரண்டு சந்தேக நபா்களுக்கு மரணதண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -