வைரலாக பரவிவரும் பாம்பு புகைப்படம்..!

ழையால் கோயிலில் வெள்ளம் புகுந்த நிலையில் சாமி சிலை தலைமீது பாம்பு ஏறி உட்கார்ந்து தன்னை காத்துக்கொண்டதாக எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவிவருகிறது.

சென்னையடுத்த மகாபலிபுரம் பகுதியில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. கடந்த இரு நாட்களாக பெய்துவரும் கனமழையால், கோயிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வெளியில் நின்ற சாமி சிலையின் கழுத்து அளவுக்கு நீர் ஓடிக்கொண்டுள்ளது.

இந்நிலையில், சாமி சிலை தலை மீது பாம்பு ஒன்று ஏறி உட்கார்ந்தபடி வெள்ளத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொண்டுள்ளது. இந்த படம், வாசுதேவன் என்பவரால் எடுக்கப்பட்டு, டிவிட்டரில் பதியப்பட்டு, தற்போது வைரலாக பரவி வருகிறது.

பாம்பு தன்னை காத்துக்கொள்ளும்போது, மனிதர்களாக நாம் நம்மை காப்பாற்ற வழி கிடைக்கும் என்று உணர்த்துவதை போல இந்த படம் அமைந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -