பாலமுனை பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக சுகாதார அமைச்சரின் இல்லத்தில் கலந்துரையாடல்..!

அ.மனீஹா-
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரை பாலமுனை ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இஸ்தாபக அமைப்பாளர் தலைமையிலான அபிவிருப்தி குழவினர் சனிக்கிழமை (12) இரவு 8.30 மணியளவில் சுகாதார அமைச்சரின் அட்டாளைச்சேனை இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது பாலமுனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதாரம் விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு ரீதியலான அபிவிருத்தி, இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்பு மற்றும் பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தின் குறைபாடுகள் மற்றும் கல்வி அபிவிருத்தி, தொடர்பாகவும் இக்குழுவினரால் எடுத்துரைக்கப்பட்டது.

இக்குழவினரின் கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட சுகாதார அமைச்சர் எதிர்காலத்தில் மின்ஹாஜ் மகா வித்தியாலயம் உட்பட பாலமுனை பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் பாலமுனை பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்பில் தன்னாலான உதவிகளை வழங்குவதுடன் பாலமுனை பிரதேசத்தின் அபிவிருத்தியில் பிரதேச வேறுபாடின்றி தான் முன்னின்டு பல உதவிகளை செய்து தருவதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இல்லத்தில் நடைபெற்ற இந்த விசேட சந்திப்பில் பாலமுனை ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் இஸ்தாபக அமைப்பாளர் எஸ்.எம்.எம்.ஹனிபா, பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழவின் முன்னாள் தலைவரும் பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியாளர் மத்திய குழவின் தலைவருமான ஐ.எல்.சுலைமாலெவ்வை, மத்திய குழவின் முக்கியஸ்தர்களான ஏ.எல்.அலியார். எம்.எம்.அலீம் ஆசிரியர், முன்னாள் தபாலதிபர் ஏ.ஆதம்பாவா, மத்திய குழவின் செயலாளர் கே.சுபைதீன், பொருளார் ஏ.பி.றிஜாப், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் சுகாதார அமைச்சரின் இணைப்பாளருமான எஸ்.எல்.முனாஸ் உட்பட மத்திய குழவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -