ஹிருணிக்காவின் வீடியோக்களை வழங்குமாறு உத்தரவு..!

தெமட்டகொடை பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர நடாத்திய ஊடக சந்திப்பின் காணொளிகளை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த காணொளிகள் சட்டமா அதிபர் காரியாலயத்துக்கு வழங்கப்படவேண்டும் என கோரி வெல்லம்பிட்டிய பொலிஸார் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பிரத்தியேகமாக விளக்கமறியளில் வைக்குமாறும் இதன் போது உத்தரவிடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -