பாதுகாப்பு அமைச்சின் நிகழ்ச்சிக்கு மைத்திரியின் மகள் பிரதம அதிதி - இது என்ன நியாயம்?

னாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், ஜனாதிபதியின் புதல்வியான சத்துரிக்கா சிறிசேனவையை மீண்டும் அரசியல் நடவடிக்கையில் இறக்கியுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நிகழ்ச்சி ஒன்றுக்கு சத்துரிக்கா சிறிசேன பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.

சிவில் பாதுகாப்பு படையினருக்கான 202 வீடுகள் மற்றும் அவர்களில் அடையாளம் காணப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பேச்சாளர் மேஜர் வஜிர குமாரதுங்க இதனை அண்மையில் கூறியுள்ளார்.

சிவில் பாதுகாப்பு படையிருக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழு் ஏற்கனவே 653 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது 10.2 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தில் சிவில் பாதுகாப்பு படையினரும் அவர்களின் 32 ஆயிரத்து 338 பிள்ளைகளும் பயன்பெறவுள்ளனர்.

இது சிறந்த விடயமாக இருந்த போதிலும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தலைமையில் இவற்றை வழங்குவதை விடுத்து அவரது மகளை பிரதம அதிதியாக கலந்து கொள்ள செய்வதாக குடும்பம் அரசியலாகும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த கௌவரத்தை பெறக் கூடிய பலர் பாதுகாப்பு அமைச்சில் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இவ்வாறே தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பு அமைச்சின் நிர்வாகத்தில் மையப்படுத்தினார்.

குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வருவதாக வாக்குறுதி வழங்குவதாக ஜனாதிபதி சிறிசேன தேர்தலில் கூறியிருந்தார். குடும்ப அரசியலை காரணம் காட்டியே மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், ஜனாதிபதி, தனது குடும்ப உறுப்பினர்களை நிர்வாகத்தில் புகுத்துவது குறித்து பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். சத்துரிக்கா சிறிசேன இதற்கு முன்னரும் சில அரச நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -