வயோதிபர்களுக்கு சேவை வழங்குவதில் மேற்கு நாடுகளுடன் இலங்கை போட்டி போடுகின்றது – பிரதி அமைச்சர்

மு.இ. உமர் அலி-
மேற்கத்தேய நாடுகளைப் பொறுத்த வரையில் முதியோர்களுக்கு முன்னுரிமையும் சிறப்பு சலுகைகளும், விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன. எமது நாடு ஒரு வளர்முக நாடாக இருப்பதனால் அவற்றுக்கு ஈடான சேவைகளை முதியோர்களுக்கு வழங்க முடியாமல் போனாலும் அவற்றுடன் போட்டி போடக்கூடிய சில சலுகைகளை முதியோர்கள் விடயத்தில் அரசு நடைமுறைப்படுத்திவருகின்றது. 

இந்த நிகழ்வில் மூத்த பிரஜைகளான உங்களை காணும் பொழுது நான் இவ்விடத்தில் பல விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இருப்பினும் எமது நாளாந்த உணவு விடயத்தில் நாம் அனைவரும் மிகவும் அக்கறையற்றவர்களாகவே இருக்கின்றோம். இயற்கையான உணவுகளை விட செயற்கையான அதிக பக்கவிளைவுகள் உள்ள உணவுகளையே உள்ளெடுக்கின்றோம். 

மருந்துகளை பொறுத்தவரை நாம் அனைவரும் ஆங்கில மருந்துகளுக்கு அடிமைகளாகிவிட்டோம். நீங்கள் ஆயுள்வேத அல்லது சுதேச மருந்துகளை உள்ளெடுக்க தயங்குகின்றீர்கள். வெளிநாடுகளிலிருந்து அதிகளவானவர்கள் இன்று இலங்கைக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் எமது நாடு அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்கின்றது. 

எமது பிரதேசத்தில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்காக சுகாதார அமைச்சு விசேட வலையமைப்பு முறையினை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனால் மருந்துகள் தட்டுப்பாடுகளுக்கு ஏற்படவோ பழுதடைந்து கொட்டிவிடும் நிலையோ ஏற்படாது. இந்த வலையமைப்பு (நேவறழசம) திட்டத்தினூடாக நாட்டின் பெரும்பாலான பணம் வீண்விரயமாவது தடுக்கப்படுகின்றது. 

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதியோர் தின விழா நிகழ்வில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் தமதுரையில் மேற்படி குறிப்பிட்டார்.

மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஜனாப். ஏ.எல்.கலந்தர் அவர்களது தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த பிரஜைகள் பாடல் நாட்டார் பாடல் கவி போன்ற கலாச்சார பெருமை வாய்ந்த நிகழ்வுகளை நிகழ்த்தினர். கலந்து கொண்டோரை கௌரவித்து பரிசுப் பொதிகளும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. ஆர்.யு.ஜெலீல் அவர்களும் அம்பாரை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் அஸ்சேஹ் அமீர் அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -