அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி மாநடு..!

அஷ்ரப் ஏ சமத்-
கில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்ணனியின் வருடாந்த மாநாடு தற்போதை நடப்பு வருடத்திற்கான தலைவா் அக்கறைப்பற்றைச் சோந்த எம்.உதுமாலெப்பை தலைமையில் எதிா்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு 7 ல் உள்ள லக்ஸ்மன் கதிா்காமா் கூட்ட மண்டபத்தில் நடைபெறும்.

இவ் வைபவத்திற்கு பிரதம அதிதியாக இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகா் கரு ஜயசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள உள்ளாா். இந் நிகழ்வில் வாலிப முன்னணியின் சிறந்த சேவையைாற்றிய முன்னாள் உறுப்பிணா்கள் சிலரும் கௌரவிக்கப்பட உள்ளனா்.வருடாந்த நிகழ்வில் சுயதொழில் முயற்சிக்காக வறுமைக்கோட்டில் வாழும் பெண்கள் 3வருக்கு தையல் மெசின்களும் வழங்கப்படும்

2016ஆம் ஆண்டிக்கான புதிய தலைமைப் பொறுப்பு குருநாகல் மாவட்டத்தின் பாருக் அவா்கள் நியமிக்கப்பட உள்ளாா். கடந்த ஆண்டு தலைமைப்பொறுப்பு அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டடது. 

மேற்படி வருடாந்த கூட்டம் சம்பந்தமாக கலந்துரையாடும் கூட்டம் அன்மையில் நாரேஹேன் பிட்டியில் உள்ள முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் தலைமையகத்தில் உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தின்போது வாலிப முன்னணியின் பல்வேறு கடந்த புதிய திட்டங்கள் கலந்துரையாடப்பட்டன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -