எப்.முபாரக்-
கடந்தகால அசாதாரண சூழ் நிலையால் உடைக்கப்பட்டு சிதைவுகளுக்குள்ளான மிகவும் பழமையானதும்,வரலாற்று சிறப்பு மிக்கதுமான திருகோணமலை மரத்தடி வீரகத்தி பிள்ளையார் தேவஸ்தானத்திற்கான திருத்தப் பணிகளும், அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலை 9.30மணிக்கு ஆரம்பமானது.
திருகோணமலை பத்திரகாளி அம்மாள் ஆலய பிரதம குரு சோ.இரவிச்சந்திர குருக்களினால் நடாத்தப்பட்டது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி உட்பட அரசியல் பிரமுகர்கள் பக்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.



