இலங்கை மற்றும் வளைகுடாநாடுகளில் வாழும் நண்பர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரையும் ஒரு வாட்ஸ்அப் குழுமமாக சகோதரர் சம்சுல் ஏ றசீத் அவர்கள் தலைமையில் இணைத்து “மாற்றம் தேவை“ என்ற பெயரில் அந்த குழுமத்தினுாடாக பல்வேறு சமூக, அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்படுகின்றது.
அந்த வகையில் சென்ற மாதம் நமது ஊர்களிலிருந்து பெண்கள் வெளிநாடு செல்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு பெண்கள் வெளிநாடு செல்வதை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சகல ஊர்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் முதற்கட்டமாக சம்மாந்துறை, மஜீட்புரம், கல்முனை, சாய்ந்தமருது போன்ற இடங்களில் சென்ற வெள்ளிக் கிழமை (2015-12-25) விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
அதே போன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை கெக்கிறாவ,பொத்துவில், மருதமுனை, நற்பிட்டிமுனை, அநுராதபுரும் மற்றும் மரிச்சிக்கட்டி போன்ற பிரதேசங்களிலும் விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் கரங்களில் கிடைக்கப் பெற்ற மற்றும் கிடைக்கப் பெறும் துண்டுப்பிரசுரத்தை வாசித்து விட்டு கசக்கி குப்பையில் போட்டு விடாமல் அதனை நன்கு வாசித்து உங்களால் முடியுமானவரை நமது ஊரில் இருந்து பெண்கள் வெளிநாடு செல்வதை தடுத்து அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
எங்களது மாற்றம் தேவை குழுவினரால் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையானது நாடு தழுவிய ரீதியில் எதிர்காலத்தில் வழங்கப்படுவதோடு வெளிநாடுகளுக்கு நமது பெண்கள் செல்லாது அவர்களை தடுப்பதற்காக சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகளையும் கோர இருக்கின்றோம்.
படத்தில் சம்மாந்துறை, மஜீட்புரம் மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் விநியோகிக்ப்பட்ட துண்டுப்பிரசுர நிகழ்வுகளைக் காணலாம்.
இப்படிக்கு,
மாற்றம் தேவை குழுமம்.
தகவல் - சம்மாந்துறை அன்சார்.







