எப்.முபாரக்-
வெளிநாடு அனுப்புவதாகக் கூறி ஏழு பேரிடம் நான்கறை இலட்சாம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த ஒருவரை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே திங்கட்கிழமை (7) உத்தரவிட்டுள்ளார்.
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடிமன் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு திருகோணமலை, கிண்ணியா, மற்றும் மூதூர் பகுதிகளில் உள்ள ஏழு பேரிடம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கூடிய சிறந்த சம்பளத்துடன் வெளிநாடு அனுப்புவதாக கூறி நான்கரை இலட்டம் ரூபாய் பணத்தினை மோசடி செய்து விட்டு தலைமறைவானதையடுத்து குறித்த ஏழு பேரும் திருகோணமலை, கிண்ணியா, மற்றும் மூதூர் பொலிஸ் நிலையங்களில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை (6) கைது செய்து திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.