எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் தொடர்ச்சியாக இரவு, பகலாக பெய்து வருகின்ற மழை காரணமாக இம்மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா, மூதூர், மற்றும் புல்மோட்டை, திருகோணமலை போன்ற பகுதிகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கி காணப்படுகின்றது.
திருகோணமலை பிரதேசத்தில் அலஸ்தோட்டம், உப்புவெளி போன்ற பகுதிகளும், நீர் நிறைந்து காணப்படுகின்றது. இம்மாவட்டத்தில் அமைந்துள்ள கந்தளாய் குளம், பரவிபாஞ்சான் குளம், கல்மெட்டியாவக் குளம் மற்றும் வான்எல குளங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ள அதேவேளை கந்தளாய் குளத்திலிருந்து மேலதிக நீரினை வெளியேற்றுவதற்காக வேண்டி பேராறு ஆற்றின் கதவு திறந்து விடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் செய்கை பண்ணப்பட்டுள்ள பேராறு, முள்ளிப்பொத்தானை, மற்றும் வான்எல போன்ற பகுதிகளில் வேளாண்மைச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகளிலும் நீர் நிறைந்து காணப்படுதனால் நீர் வடிந்தோடுவதில் தாமதம் ஏற்படுகின்றது.