சிரேஷ்ட ஊடகவியாலாளர் எம்.ஐ.எம்.வலீத் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்..!

எம்.வை.அமீர் -
1997.01.01 ஆம் திகதி நவமணி பத்திரிக்கையின் ஊடகவியலாளராக இணைந்து கொண்ட இவர், 2000.06.20 ஆம் திகதி முதல் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிக்கையின் மருதமுனை தினகரன் விசேட நிருபராக நியமிக்கப்பட்டார்.

இதற்க்கு மேலதிகமாக வீரகேசரி, தினக்குரல், சுடர் ஒளி உள்ளிட்ட பல தினசரி வாராந்த பத்திரிகைகளில் கட்டுரைகளையும் 2000 முதல் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். 1998 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தில் உறுப்பினராக இணைந்து பின்னர் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக மற்றும் உபசெயலாளராகவும் பதவிவகித்து அமைப்பின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது “மெட்ரோமிரர்” இணையத்தளத்தின் பணிப்பாளராகவும் இணை ஆசிரியராகவும் கடமையாற்றிவருகிறார்.

1975 ஆம் ஆண்டு பிறந்த இவர், மருதமுனை அல் மனார் மத்திய கல்லுரி மற்றும் கல்முனை சாகிரா கல்லுரி என்பனவற்றின் பழைய மாணவருமாவார். 2003 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பட்டத்தையும் அதே ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறைக்கான டிப்ளோமாவையும் பூர்த்தி செய்துள்ளார். 2000ஆம் ஆண்டு பொதுச்சுகாதார பரிசோதகராக இணைந்துகொண்ட இவர், 2005 இல் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமான ஆசியா பவுண்டேசனின் கிழக்குமாகாண நிகழ்ச்சித்திட்ட அதிகாரியாக இணைந்து இன்றுவரை உள்ளுராட்சி மன்றங்களின் மேம்பாட்டுக்காக பணியாற்றி வருகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -