எம்.ரீ.எம்.பாரிஸ்-
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தில் அமைத்துள்ள மீராவோடை மன்பஉல்ஹூதா அறபுக்கல்லூரி ஷீஆக் கொள்கையினை போதிக்கும் கல்லூரியாக உள்ளதுடன் இஸ்லாமிய அகீதா கோட்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக பிரதேச மக்களும், பள்ளிவாயல் நிருவாகங்களும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடா கிளை நிருவாகமும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் குறிந்த அறபு கலாபீடத்திற்கும், ஷீஆக்களுக்கும் எதிராக மக்கள் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டனர்.
இது குறிந்து மீராவோடை பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயல் பொது மக்களுக்கு நேற்று 11.12.2015 இஷா தொழுகையின் பின்னர் பள்ளிவாயல் ஒலி பெருக்கியில் பகிரங்கமான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது
அவ் அறிவித்தல் பின்வருமாறு.
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்..
மீராவோடை ஜூம்ஆப்பள்ளி வாயல் பொது மக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்.
மன்பஉல்ஹூதா அறபு கல்லூரி தொடர்பான ஊர் ஜமாஆத்தார்களுக்கான முக்கிய அறிவித்தல்
மன்பஉல்ஹூதா அறபு கல்லூரி அஹ்லூல்சுன்னதுல்வல் ஜமாஆத் கொள்கைக்கு முரனான வழிகெட்ட சிந்தனைகள் போதிக்கப்படுவது குறிந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கல்குடா கிளையினால் தரப்பட்ட கடிதத்திற்கு அமைவாக மீராஜூம்ஆப்பள்ளி நிருவாகம் மன்பஉல்ஹூதா அறபு கல்லூரி நிருவாகத்தினை இது குறிந்து கலந்துரையாடுவதற்கு இரண்டு தடவைகள் எழுத்து மூலமாக எமது பள்ளி நிருவாகத்தினால் அழைப்பு விடுத்தும் மன்பஉல் ஹூதா நிருவாகம் அதனை புறக்கனித்துள்ளது.
இந்நிலையில் கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையும் எமது நிருவாகமும் இணைத்து 11.12.2015 இஷா தொழுகையின் பின் இடம் பெற்ற கலந்துரையாடலில் கீழ் வரும் முடிவினை ஜமாஆத்தாரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றது…
01.இப்பிரதேசத்தில் ஷிஆக்களது நடவடிக்கைகள் வேகமாக பரவி வருவதால் பொது மக்களாகிய நீங்கள் விழிப்புடன் செயற்படுமாறும், அதற்கு எதிராக எமது நிருவாகத்தினால் மேற்கொள்ளப்படும் எடுக்கும் செயற்பாடுகளுக்கு ஜமாஆத்தார்கள் பூரண ஓத்துழைப்புகளை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
02.எமது பிரதேசத்தில் ஷிஆக் கொள்கை பரவுவதற்கு பின்ணனியாக மன்பஉல்ஹுதா அறபு கல்லூரி செயற்படுகின்றது என்பதால் அதன் எந்த ஒரு நிகழ்வுகளிலும் ஜமாஆத்தார்கள் பங்கு கொள்ள வோண்டாம் என்று எமது நிருவாகம் வோண்டிக்கொள்கின்றது.
நிருவாகம்.

