சவுதி அரேபியாவில் நடைபெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த தேர்தலில் முதல்முறையாக பெண்கள் வாக்களிக்கின்றனர்.
அத்துடன், இந்த தேர்தலில் பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
978 பெண் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் வேட்பாளர்கள் பிரசாரங்களை மேற்கொள்வதற்காக, பிரத்தியோகமான மறைவிடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
