வசிம் தாஜுடின் கொலை குறித்த சீ.சீ.வி காட்சிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் மிக முக்கியமான அரசியல்வாதிகள் சிலர் மீதும் குற்றம் சமத்தப்பட்ட பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கொலைச் சம்பவம் தொடர்பான திடுக்கிடும் காட்சிகளை புலனாய்வுப் பிரிவினர் திரட்டியுள்ளனர்.
உயிரிழந்த நபர் பயணத்தை ஆரம்பித்தது முதல் கொலையுண்ட இடம் வரையிலான பகுதிகளில் இந்த சீ.சீ.டி.வி கமரா காட்சிகள் திரட்டப்பட்டுள்ளன. இந்த காட்சிகள் விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த மரணம் கொலை என்பதனை நிரூபிக்கும் சாட்சியங்கள் நீதிமன்றில் ஏற்கனவே சமாப்பிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தக் காட்சிகளையும் விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சீ.சீ.டி.வி கமரா காட்சிகள் வெளியாகினால் நாட்டின் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சைகள் ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்படுகிது.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
