அகில பாரதத் துறவியர் மாநாட்டில் இலங்கையிலிருந்தும் கலந்து கொள்ள வேண்டும்.!

ந.குகதர்சன்-
ந்தியாவின் தமிழ் நாடு கும்பகோணத்தில் எதிர்வரும் மாசி மாதத்தில் நடைபெறவுள்ள அகில பாரதத் துறவியர் மாநாட்டில் இலங்கையிலிருந்தும் துறவியர்களும், இந்து அன்பர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பேரூர் ஆதீனத்தின் இளைய வட்டம் வணக்கத்துக்குரிய சீர்வளர்சீர் மருதாசல அடிகளார் வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக் கழக விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இளையவட்டம் பேரூர் ஆதினம் வணக்கத்துக்குரிய சீர்வளர்சீர் மருதாசல அடிகளார், நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள், மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தஜி மகராஜ், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், அகில இலங்கை இந்து மா மன்றத்தின் செயலாளர் மு.கதிர்காமநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த மகாநாட்டில் உலக இந்துக்கள் பற்றியும், இந்துக்களின் ஒன்றுபட்ட செயற்பாடுகள் பற்றியும், சிந்திக்க இருக்கிறோம். இந்துக்களின் வளர்ச்சிகள், சிக்கல்கள், இலங்கையில் இருக்கக் கூடிய இந்துக்களுக்குரிய பிரச்சினைகள் பற்றியும் ஆராயவிருக்கிறோம்.

எதிர்வரும் மாசி மாதத்தின் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் இந்த மகாநாடு நடைபெறவுள்ளது. இதில் உலகம் முழுவதும் இருக்கக் கூடிய துறவியர்கள், இந்து அன்பர்கள் என 5000 பேரை எதிர்பார்க்கிறோம்.

இந்த மகா நாட்டினை அனைத்து ஆதீனங்களும், இந்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஏற்பாடுகளை மேற்கொள்கின்றன. மாசிமகம் விழாவாக 10 நாட்கள் நடைபெற்றிருந்தது. இந்த வருடத்தில் துறவியர்களை அழைத்து மகாநாட்டை நடத்துவதற்கு அகில உலக துறவியர்கள் சங்கத்தினர் முன்வந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் இருக்கக் கூடிய திருவாடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம், தருவூர் ஆதீனம், பேரூர் ஆதீனம், திருவை ஆதீனம், இந்து அமைப்புக்கள், ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிசித் போன்ற அமைப்புக்கள், வாழும் கலை அமைப்பின் ரவிசங்கர் அவர்கள், ஈசான யோக மையம் சத்குரு அவர்கள், சின் மயா அமைப்பு உள்ளிட் பல்வேறு அமைப்புகளாக இணைந்து இதனை ஒரு பெரு விழாவாக நடத்துகிறோம்.

இந்த விழாவை உலகம் எங்கும் இருக்கக் கூடிய மக்கள் கண்டு அருளைப் பெறவேண்டும் இந்து மனத்தோடு தொடர்புடன் இருக்கக்கூடிய மக்களையும் அழைத்து பங்குகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இங்குள்ள மக்களையும் அன்போடு அழைக்கின்றோம்.

18ஆம் திகதி காலை மிகப் பெரியளவிலே தொடக்க விழா நடைபெறும், அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு கும்பகோணத்தில் இருக்கக் கூடிய கோயில்களையெல்லாம் வலம் வந்து கும்பகோணக் குளத்தில் மிகப் பெரியளவிலே ஆராதனை இடம் பெறும்.

மிகுதி இரண்டு நாட்களிலும் நிகழ்வுகள், சான்றோர்களின் சொற்பொழிவுகள் எனப் பல நடைபெறவுள்ளன. இதில் இந்துக்களின் வரலாறு, தொன்மைகள், பிரச்சினைகள், சிக்கல்கள் தொடர்பிலும் ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -