மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு ஏ.ரீ.எம். வேண்டும்..!

எஸ்.அஷ்ரப்கான்-
பிரயாணிகளின் நலன் கருதி மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தன்னியக்க பணப்பறிமாற்ற இயந்திரம் (ஏ.ரீ.எம்) ஒன்றினை பொருத்துவதற்கு ஆவன செய்யும்படி கோரி மகஜர் ஒன்றினை சாய்ந்தமருது சுபீட்சம் சமூக நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஐ.எம். அன்ஸார் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு கொமர்சியல் வங்கி முகாமைத்துவப் பணிப்பாளர் அனுப்பிவைத்துள்ள இம்மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டின் நாலாபாகங்களிலும் புகையிரத சேவை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களது பயணங்களை புகையிரதத்தின் மூலமே மேற்கொள்கின்றனர். அதே போல் வெளி மாவட்ட மக்களும் அண்மைக் காலமாக கிழக்கை நோக்கி புகையிரதத்தில் தினமும் வருகை தந்தவண்ணமுள்ளனர்.

இவர்கள் சுற்றலா பிரயாணிகளால் கவரப்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பிரதேச ரம்மியமான சூழலில் தங்களின் விடுமுறையினை குடும்பத்தினருடன் கழிப்பதற்காகவே வருகின்றனர். நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பயணிப்பதாக அறியமுடிகின்றது.

பிரயாணிகள்; பயணங்களை மேற்கொள்ளும் போது தங்களின் பாதுகாப்பு கருதி பணத்திற்கு பதிலாக உரிய வங்கிகளின் டெபிட் வீசா அட்டை மூலமே பெரும்பாலும் பணப்பறிமாற்றங்களை செய்வதுடன் அவர்களின் தேவைக்கேற்ற தொகையினையும் ஏ.ரீ.எம். மூலம் பெற்றுக் கொள்கின்றனர்.

கொமர்ஷல் வங்கியானது புகையிரதப் பிரயாணிகளின் நலன் கருதி கொழும்பு கோட்டை, மருதானை, ராகம, கம்பஹா, வெயாங்கொட, கணேமுல்லை, பொல்கஹவெல, கண்டி, பாணந்துறை, மொரட்டுவை, காலி, கந்தான, கிளிநொச்சி ஆகிய புகையிரத நிலையங்களில் ஏ.ரீ.எம். இயந்திரங்களை பொருத்தி வாடிக்கையாளர்களுக்கான சேவையினை வியாபித்துள்ளமை பாராட்டத்தக்க விடமயமாகும். 

அதே போல் பிரயாணிகள் அதிகமாக வருகைதரும் மட்டககளப்பு புகையிரத நிலையத்திலும் ஏ.ரீ.எம். இயந்திரம் பொருத்தப்படுமாயின் விஷேடமாக பிரயாணிகள் மிகவும் பயனடைவார்கள். அத்துடன் புகையிரத ஊழியர்களும் புகையிரத நிலையத்திற்க்கு அருகாமையில் இருக்கும் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிலும் நூற்றுக்கணக்கான வெளிமாவட்ட ஆசிரியர்களும் உச்ச பயனை அடைய முடியும் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆகவே மேற்படி விடங்களை கவனத்திற்கொண்டு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தன்னியக்க பணப்பறிமாற்ற இயந்திரம் (ஏ.ரீ.எம்) ஒன்றினைப் பொருத்துவதற்கு உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஆவன செய்யும் படியும், இவ்விடயமாக தங்களின் விஷேட கவனத்தை செலுத்தும் படியும் பொதுமக்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -