கொழும்பில் மர்ம சடலங்கள் - பொலிஸாரிற்கு பெரும் தலைவலி

கொழும்பு நகரில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும், புறநகர்பகுதிகளிலும் கடந்த வாரங்களில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளமை பொலிஸாரிற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏரிகள், வீதி ஓரங்கள், கைவிடப்பட்ட கட்டிடங்கள், மற்றும் கடற்கரையோரங்களில் இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஓரு வாரத்திற்கு முன்னர் பெய்ரா ஏரியில் உடல் ஓன்று மிதப்பதாக பொலிஸ் அவசர பிரிவினருக்கும், கொம்பனிவீதி பொலிஸாhருக்கும் தொலைபேசி அழைப்புகள் வந்தன.

பொலிஸார் அந்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டவேளை கொழும்பு ரோவிங்கிளப்பிற்கு அருகில் உடல் ஓன்றை கண்டுபிடித்தனர். ஆனால் அந்த உடலில் வெளிக்காயங்கள் காணப்படவில்லை, உடல் உடனடியாக பிரதேசபரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது என தெரிவித்தார் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தின் குற்றவிவகாரங்களிற்கான பொறுப்பான பொலிஸ் அதிகாரி நாலக குணசேகர.

உடல் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் பரவியதை தொடர்ந்து கொழும்பு துறைமுக பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் பிணமாக மீட்கப்பட்ட நபர் மூன்றாம குறுக்கு தெரிவில் வேலைபார்த்து வந்தவர் என தெரிவித்தனர். இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறிப்பிட்ட நபர் கட்டுமானப்பணிநடைபெறும் பகுதியொன்றில் மின்சாரதிருத்தவேலைகளில் ஈடுபட்டுவந்தவர்என்பது தெரியவந்தது, அவர் சில நாட்களிற்கு முன்னர் தான் காணமல்போயிருந்தார்.சட்டமருத்து அதிகாரிகளின் தகவலின் படி குறிப்பிட்ட நபரின் தலையில் காயங்கள் காணப்பட்டுள்ளன. அவர் நீரில் மூழ்கி இறக்கவில்லை.

அதேதினத்தில் நாவலகொழும்பு திறந்த பல்கலைகழகத்திற்கு அருகில் உள்ள கால்வாயில் உடல ;ஓன்று வீசப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசரபிரிவிற்கு தகவல்கிடைத்தது. பொலிஸார் அங்கு சென்றபோது அந்த உடல் ஐந்து நாட்களாக அங்கு காணப்படுவதும்,முகம் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதையும் கண்டுபிடித்தனர். அங்கு பிணமாக காணப்பட்ட நபர் யார் என்பதை பொலிஸார் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.

இதேவேளை கல்பிட்டியில் வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நவம்பர் 18 ம்திகதி வெளிநாட்டு பிரஜையொருவர் கல்பிட்டி கடற்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். 

இது குறித்தn விசாரணைகள் தொடர்கின்றன, இதற்கு முன்னதாக ஓக்டோபர் 27ம் திகதி கல்பிட்டியில் உள்ள கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது இதுவரை அவர் யார்என பொலிஸார் அடையாளம் காணவில்லை.அதற்கு சில வாரங்களிற்கு முன்னர் அப்பகுதியில் உள்ள கால்வாயில் உரப்பையொன்றினுள் பெண் ஒருவரின் இரண்டு துண்டங்களாக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது,

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -