ஜனாதிபதி, பிரதமரின் அலுவலகங்கள் இடமாறும் - சம்பிக்க ரணவக்க

மேல் மாகாணத்தைப் பெருநகரமாக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அலுவலகம், வாசஸ்தலங்கள், ஆகியன ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைக்கு இடமாற்றப்படவுள்ளதாக, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

'பிரதமர் அலுவலகங்கள், பத்தரமுல்லையில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு அண்மித்த பிரதேசங்களில், புதிதாக நிர்மாணிக்கப்படும். பிரதமரின் வாசஸ்தலங்களும், பத்தரமுல்லையில் புதிதாக நிர்மாணிக்கப்படும். எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி, பெருநகர அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களை அறிவதற்கான வெள்ளை அறிக்கை ஒன்று வெளியிடப்படும். 

கட்டுநாயக்க மற்றும் மினுவாங்கொட நகரங்கள், முற்றுமுழுதாக விமானப் போக்குவரத்து நகரங்களாக மாற்றியமைக்கப்படும்' எனத் தெரிவித்த அவர், மாலபே, ஹோமாகம மற்றும் மீரிகம ஆகியவை, கைத்தொழில் வலயங்களாக்கப்படும் எனக் கூறினார். 

அத்துடன் ஸ்ரீ ஜயவர்தனபுர, கடுவெல பகுதி, நிர்வாக நகரமாகவும், விவசாய வலயமாக அவிசாவளையும் அபிவிருத்திசெய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -