மரணமடைந்த றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் சடலத்தில் இருந்த சில எழும்புகள் காணாமல் போனமை தொடர்பில் முன்னாள் நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவால் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டதற்கு இணங்க இன்று (09) கொழும்பு மேலதிக நீதவான் பிரயந்த லியனகே முன்னிலையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தன்னால் 2012ம் ஆண்டு குறித்த மரணம் தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சில எழும்புகளை குளிரூட்டியில் வைத்து பாதுகாக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதாக, அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் 2013ம் ஆண்டு ஜூன் 3ம் திகதி தான் ஓய்வு பெற்றதாகவும், அதன் பின்னர் இந்த மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரியப்படுத்தியுள்ளார்.