கல்முனை: மாணவர்களுக்கு வவுச்சர்கள் மூலம் சீருடைத்துணி வழங்கும் வர்த்தக நிறுவனங்கள்..!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ரசாங்கத்தின் புதிய திட்டத்தின் படி பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்கள் மூலம் இலவச சீருடைத்துணி வழஹ்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை வலையக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் கல்முனை கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்கள் மூலம் இலவசச் சீருடைத்துணி வழங்க கல்முனை கல்வி வலயத்திற்குட்ட பிரதேசத்தில் 32 வர்த்தக நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்.

இந்த வவுச்சர்களைக் கொண்டு பின்வரும் பெயர்களைக் கொண்ட வர்த்தக நிறுவனங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான சீருடைத் துணிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மருதமுனையில்:- பறகத் டெக்ஸ், சீப் கோணர், மெம் டெக்ஸட்; டையில், ஜெஸீமாஸ். 

கல்முனையில்:- ஸ்மாட் டெக்ஸ்டையில், பெஷன் டெக்ஸ், நியூபாவா டெக்ஸ், பெஸ்ட் பொயின்ட், பேஸ் டெக்ஸ், சனா டெக்ஸ்; டையில், ஒரேன்ஞ்; டெக்ஸ், எம்.எம்.ஏ.டெக்ஸ், சபாஸ் டெக்ஸ், பெஸ்ட்டர்.

சாய்ந்தமருதில்:- முபாறக் டெக்ஸ், நியூ செலக்ஸன், பெமிலி சொயிஸ், டில்லி பெஸன், என்.ஆர் சைஸ்பார்க், மஜீதியாஸ், ஏசியா டெக்ஸ்டையிஸ், ஆலிப் டெக்ஸ், றியல் வன், டொப்ஜே டெக்ஸ் டெக்ஸ், சல்மா டெக்ஸ், எக்ஸ்போட் டெக்ஸ், 

நற்பிட்டிமுனையில்:- முபீத் டெக்ஸ்,

காரைதீவில்:- டின்ஸ் இந்தியன்,

நிந்தவூரில்:- பஸீல் டெக்ஸ், நிம்றான் டெக்ஸ், அன்வர் டெயிலரிங், ஹன்டெக்ஸ் 

ஆகிய 32 வர்த்தக நிறுவனங்கள் ஊடாக வவுச்சர்களுக்கு மாணவர்களுக்கான சீருடைத் துணி வழங்க கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார். 

பேற்றோர்கள் தரமான துணிவகைகளை இனங்கண்டு வாங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -