வன்னியார் சதுக்கம் அமைப்பினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் செயற்திட்டம்...!

ஊடகப்பிரிவு, முர்சித்-
வன்னியார் சதுக்கம் அமைப்பினால் மாணவர்களின் கல்வி; நடவடிக்கைகளை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தைச் சேர்ந்த அஸ்ஸஹிதா வித்தியாளயம் மற்றும் ஜேர்மன் நட்புறவுப் பாடசாலைகளைச் சேர்ந்த 200 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களைக் கொண்ட தொகுதியை வழங்கி வைக்கும் நிகழ்வு 30.11.2015 திங்கட்கிழமை வன்னியார் சதுக்கம் அமைப்பின் தலைவர் எஸ்.எம். றகீப் அவர்களின் தலைமையில் நிந்தவூர் ஜேர்மன் நட்புறவுப் பாடசாலைகளையில் நடைபெற்றது.

இன்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எம் சலீம், விஷேட அதிதிகளாக ஹபீம் வங்கி முகாமையாளர் ஏ.எல். அனவர்டீன், டீமா பிஸ்கட் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.சீ.எம் சுபைர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி யூ.டீ.ஏ. பத்மசிறி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.அத்தோடு அஸ்ஸஹீதா வித்தியாளய அதிபர் ஏ.எம் அன்வர், ஜேர்மன் நட்புறவு பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எஸ்.எம் அன்வர் மௌலவி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

பூரணத்துவமாண கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு, பெற்றாரை இழந்த மாணவ மாணவினருக்குப் புத்தகப் பைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
அதிதிகள் தங்களது உரைகளில் 'காலத்தின் அவசரத் தேவையின் நிமித்தம் யாருக்கு இந்த உதவிகள் போய்ச் சேர வேண்டுமோ, அத்தகைய மாணவ மாணவிகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளமை நிந்தவூர் வரலாற்றில் முதல் முறை' என பிரஸ்தாபித்தனர். ஏனெனில் மாணவர்களைப் பொருத்தவரையில், அவர்களின் மனநிலையைப் பொருத்தவரை, அவர்களின் குடும்பநிலையை கணித்தவரை, எம்மால் அறிந்துகொள்ள முடிந்தது யாதெனில், குறித்த பாடசாலையை நோக்கி மாணவர்களின் வரவானது ஏனைய பாடசாலைகளை விடவும் அதிகமாக காணப்பட்டது. ஏனெனில் தினமும் வழங்கப்படும் காலையுணவே அதற்கு காரணமாகும்.

இந்த ஒரு உதாரணம்; போதும் அந்த மாணவர்களின் நிலையை உலகறியச் செய்வதற்கு. கற்பதற்கான தகுதியிருந்தும் அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல், நாம் எல்லோரும் நமது நிலையை யோசித்துக் கொண்டிருந்ததால், கல்வியை இழந்த அந்தச் சமூகத்தின் நிலையை சிந்தித்துக் கூட பார்க்க முடியாது.

கவிதைப் போட்டியில் மாவட்டமட்டத்தில் தெரிவாகி தேசிய மட்டத்திற்கு கொழும்பு தாமரைத்தடாகத்திற்கு சென்றுவந்தஜேர்மன் நட்புறவுப் பாடசாலையின் மாணவனை நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்??.எத்தனை மாலைகள் அவனின் கழுத்துக்களை அலங்கரித்தன??.. சிந்திப்போம் சகோதரர்களே..

இது ஒரு தூண்டலுக்கான பதிவே அன்றி பிரபல்யத்துக்கான பதிவு அல்ல, முடிந்தால் எம்மோடு இணையுங்கள். வறுமைப்பட்ட தேசத்தில் இருந்து உருவாக்கப்படும் ஒவ்வொரு கல்விமானும் கலங்கரை விளக்கமாக வாழ்ந்ததுதான் வரலாறு. அந்த வரலாற்றை நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்ட ஒன்றாய் பயணிப்போம்- அல்லாஹ்வுக்காக மட்டும் கைகோர்ப்போம்.

(கல்வியில் எழுச்சியை நோக்கி வன்னியார் சதுக்கம்)


கற்பவனாய் இரு
கற்றுக் கொடுப்பவனாய் இரு
கற்பவனுக்கு உதவுபவனாய் இரு
நான்காமவனாய் இருந்துவிடாதே!..
(நபிமொழி)





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -