தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசனை, இலங்கைக்கான ஐரோப்பிய யூனியன் தூதுவர் டேவிட் டெலி சந்தித்து உரையாடியுள்ளார்.
இன்று நடைபெற்ற இந்த சந்திப்பு தேசிய கலந்துரையாடல் அமைச்சில் நடைபெற்றது. தூதுவருடன் ஐரோப்பிய யூனியனின் தெற்காசியாவுக்கான தலைமை அதிகாரி ஹான்ஸ் பார்ன்ஹாமர், ஐரோப்பிய யூனியனின் அபிவிருத்திக்கான தலைமை அதிகாரி லிபுஸ் சொக்போவா ஆகியோரும் சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.

இனங்களுக்கு மத்தியில் தேசிய சகவாழ்வு, மும்மொழி கொள்கை அடிப்படையில் மொழியுரிமையை உறுதிப்படுத்துவது மற்றும் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சுக்கான உத்தேச ஐரோப்பிய யூனியனின் உதவிகள் ஆகியவை பற்றி கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -