அமெரிக்க சமூகத்திலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வெறுப்பு பிரச்சாரத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக எனது குரலை பதிவு செய்கிறேன் என பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்திக்குரிப்பானது,
”சமீபத்தில் நடைபெற்ற பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவில் பல தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பேசி வருவது இங்கு உள்ள முஸ்லிம்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வை தோற்றுவித்திருக்கிறது. அவர்கள் எங்கே தாங்கள் அச்சுருத்தப்படுகிரோமோ என்று என்னும் நிலையை உருவாக்கியிருக்கிருப்பதை என்னால் உணர முடிகிறது.
ஒரு நல்ல யூதக்குடும்பத்தவராக, என்னுடைய பெற்றோர் எனக்கு போதித்தது நாம் எந்த ஒரு சமூகத்திற்கெதிராக அநீதி நடைபெறும் போதும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான், இப்பொழுது நாம் பாதுகாப்பாக இருப்பதாக பட்டாலும் ஒரு கட்டத்தில் ஒரு பிரிவினரை தாக்கும் சுதந்திரம் பெற்றவர்கள் எந்த நேரத்திலும் மற்றவர்களையும் தாக்குவார்கள் .
ஃபேஸ்புக் நிறுவனத்தின் அதிபராக நான் சொல்லிக்கொள்வது , நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால் உங்களுக்கு ஃபேஸ்புக் எப்பொழுதும் ஆதரவளிக்கும், அச்சமும் பயமுமற்ற ஒரு சமாதானமான சூழ்நிலையை உருவாக்குவதில் நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம்.
சமீபத்தில் எங்களுக்கு பிறந்திருக்கும் குழந்தை எங்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்தியிருக்கிறது. ஒருவர் நம்மீது காட்டும் வெறுப்பு நம்மையும் வெறுப்பு மநூநிளைக்கும் தள்ளிவிடும் வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் நாம் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை. நாம் ஒன்று பட்டு கைகோர்த்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொள்ளும் பொது நம்மால் நிச்சயமாக ஒரு புதிய உலகை படைக்க முடியும்.
இவாறு அவர் தெரிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு பலதரப்பட்ட மக்களாலும் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
