இனவாதத்தை எழுதுவோர் மற்றும் பேசுவோருக்கு எதிராக 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை.!

னவாத, மதவாத ரீதியில் ஏதாவது அறிவிப்புச் செய்பவர்களுக்கு எதிராக 2 வருடங்கள் கடின வேலையுடன் கூடிய, கடூழியச் சிறைத்தண்டனை வழங்கும் சட்ட மூலமொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மூலத்தை அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும், அமைச்சருமான கயந்த கருணாதிலக்க நேற்று பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

இனங்களுக்கிடையில் இனவாத, மதவாத பிரச்சினைகள் ஏற்படும் விதமாக எழுதுவது பேசுவது மற்றும் சைகை காட்டுவதும் இந்த சட்ட மூலத்தில் குற்றமாக கருதப்படுகின்றது.

அபராத வழக்கு மற்றும் தண்டப்பண சட்டம் தொடர்பான மறுசீரமைப்பு விவாதத்தின் போது இந்த சட்ட மூலம் விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குற்றத்தைச் செய்தவர் நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -