தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்காக அதிஉயர் பங்காற்றுகிறது..!

எம்.வை.அமீர் ,எம்.ஜே.எம்.சஜீத்-
லங்கையில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களின் தரத்துக்கு ஏற்ப தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இங்கு கல்விகற்கும் மாணவர்களின் கல்வி செயற்பாட்டுக்காக அதிஉயர் பங்காற்றுகிறது என்று இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின்மை தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பு ஒன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இங்கு கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 2012ல் ஆரம்பிக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் தொடர்பில், சில மறைமுக சக்திகளின் தவறான பின்தூண்டலின் காரணமாக இங்கு கல்வி பயிலும் மாணவர்களால் பல்கலைக்கழகத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் இம்மாணவர்கள் முன்னெடுக்கும் இவ்வாறான செயற்பாடுகள் அவர்களது எதிர்காலத்தையே பாதிக்கும் என்றும், பொறியியல் பீட மாணவர்களின் தவறான செயற்பாடுகளுக்கு எதிராக பலகலைக்கழக நிருவாகம் இதுவரை எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று தெரிவித்த உபவேந்தர், அவர்கள் உடனடியாக தங்களது கல்வி நடவடிக்கைகளில் இணைந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

பொறியியல் பீடத்தின் தற்போதுள்ள வசதி வாய்ப்புக்கள் தொடர்பில் பிரஸ்தாபித்த உபவேந்தர், ஏனைய பல்கலைக்கழகங்களில் பீடங்களை ஆரம்பிக்கும்போது இருந்த வசதிகளை விட இங்கு அதிகமாகவே இருப்பதாக தெரிவித்தார்.

மாணவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள சில குறைபாடுகள் நிவர்த்திக்கப்படுவதர்க்கான இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் குறித்த குறைபாடுகளின் தாக்கம் மாணவர்கள் மீது எவ்வித தாக்கத்தையும் செலுத்தாவண்ணம் ஏனைய பல்கலைக்கழகங்களின் வளங்களை பயன்படுத்தி நிவர்த்திக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட ஆய்வுகூடங்களுக்காக நவீனரக உபகரணங்களை தருவித்துள்ளதாகவும் இன்னும் அநேக உபகரணங்களை தருவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பதிவாளர் எச்.அப்துல் சத்தார், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் சில நிருவாக நடைமுறைகள் காரணமாக சிறு காலதாமதங்கள் ஏற்பட்டதாகவும் அவைகளும் பூர்த்தியாகும் இடத்துக்கு நெருங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

பொறியியல் பீட பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன், பொறியியல் பீடத்தின் ஆரம்பம் மற்றும் தற்போதுள்ள களநிலவரம் எதிர்காலத்தில் இப்பீடத்தை முன்கொண்டுசெல்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் நீண்ட விளக்கமளித்தார்.

சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.டபிள்யூ.பி.பாலசூரிய, துறைத்தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.இல்ஹாம் ஜெசில், விரிவுரையாளர்களான ஏ.எம்.அஸ்லம் சஜா மற்றும் ஏ.எல்.எம்.றிஸாத் உள்ளிட்டவர்களுடன் துணைப்பதிவாளர் எம்.ஐ.நௌபர் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இறுதியில் ஊடகவியலாளர்களுக்கு பொறியியல் பீட ஆய்வுகூடம் மற்றும் வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் சுற்றிக்காண்பிக்கப்பட்டது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -