தொண்டையில் பிஸ்கட் சிக்கி குழந்தை மரணம்..!

பிஸ்கட் தொண்டையில் சிக்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் 05 மாதங்களேயான உதயபாலன் காசினி என்ற பெண் குழந்தை, நேற்று திங்கட்கிழமை (14) மரணமடைந்த சம்பவம் யாழ்ப்பாணம், 3ஆம் குறுக்குத் தெருவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஞாயிற்றுக்கிழமை (13) இரவு குழந்தைக்கு பாலில் பிஸ்கட்டையும் சேர்த்துக் கொடுத்து குழந்தையை உறங்க வைத்துள்ளனர். 

திங்கட்கிழமை (14) அதிகாலை எழுந்து குழந்தையை தூக்கிய போது, குழந்தை அசைவின்றிக் கிடந்துள்ளது. உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை தாய் எடுத்துச் சென்றபோதும், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. 

உடற்கூற்றுப் பரிசோதனையில் பிஸ்கட் தொண்டையில் சிக்கியமையினால் குழந்தை மரணித்தது எனக் கூறப்பட்டது. விசாரணைகளை மேற்கொண்ட, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -