பாலித தெவரப்பெருமவிற்கு உள்ளூராட்சி, மாகாண சபைகள் பிரதிமைச்சுப் பதவி..?

க்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும, உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபை பிரதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பிரபலமான அரசியல்வாதியான இவர், கடந்த பொதுத் தேர்தலின்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளினால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார்.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் பிரதியமைச்சராக இருந்த கருணாரத்ன பரணவித்தாரண ஊடத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வெற்றிடத்துக்கு பாலித தெவரப்பெரும நியமிக்கப்படவுள்ளார்.

ஜனாதிபதி இத்தாலிய சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து நாடுதிரும்பியவுடன் இவரது பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -