பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனையைச் சேர்ந்த உதவிக் கல்விப்பணிப்பாளர் சத்தார் எம் பிர்தௌஸ் கலாநிதி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார. இலங்கை கிழக்குக் பல்கலைக்கழகத்தின் தற்போதய உபவேந்தர் உமா குமாரசுவாமி இவருக்கான பட்டத்தை வழங்கினார்.
இலங்கை கிழக்குக் பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை (19-12-2015) நடைபெற்ற பொதுப்பட்டமளிப்பு விழாவின்போதே இவர் இந்தப்பட்டத்தைப் பெற்றார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்ற முதல் முஸ்லிம் கலாநிதி மருதமுனை சத்தார் எம் பிர்தௌஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு சபை உறுப்பினராவார்.
