அட்டாளைச்சேனை IPL "சமூகத்திற்கான ஒன்றியம்" அட்டாளைச்சேனை அஷ்ரஃப் விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் சிரமதான நிகழ்வின் முதல் கட்ட வேலைகள் பிரபல சமூக சேவையாளரும், IPL ஒன்றியத்தின் ஆலோசகருமான ஜனாப் மனாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கெளரவ கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அல்ஹாஜ் ALM.நஸீர் அவர்களின் மேற்பார்வையில் அட்டாளைச்சேனை 6ம் பிரிவு கடற்கரை பொது மைய்ய வாடியில் வியாழன் (24) காலை இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வு சிறப்புர நடைபெற காரணமான கலந்து கொண்ட நலன்விரும்பிகள், காலை ஆகாரம் வழங்கிய தனவந்தர்கள், உபகரணங்களைத் தந்துதவிய நல்லுள்ளங்கள், செய்திகளை மக்கள் மத்தியில் சென்றடையச் செய்த ஆர்வலர்கள்/ நிறுவனங்கள் மற்றும் ஆலோசனைகளைத் தந்துதவிய ஆலோசகர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு அவர்கள் தேகாரோக்கியத்தோடு வாழ வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றோம்.
அத்தோடு எமது மாபெரும் சிரமதான நிகழ்வின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை (26) காலை 6 மணி முதல் ஆரம்பமாகவுள்ளன என்பதை அறியத் தருவதோடு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
MIM.SIHAN


