செயிட் ஆஷிப்-
கல்முனை மாநகர சபை நிர்வாகம் ஒழுங்கு செய்திருந்த மீலாதுன் நபி சிறப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், எதிர்க் கட்சித் தலைவர் கே.ஏகாம்பரம், ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் நளீம் எம்.பதுர்தீன் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அல்குர்ஆன் பராயணம், துஆப் பிரார்த்தனை மற்றும் மார்க்க சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.




