மறைந்தும் மறையா மாமனிதர் மசூர் ஹாஜியார் மறைந்து 5 ஆண்டுகள்..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வன்னி விருட்சம் மர்ஹூம் மசூர் ஹாஜியார் அவர்கள் எருக்கலம்பிட்டியில் புகழ் பூத்த குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்து சிறு வயதிலேயே தந்தையையும், தாயையும் இழந்து எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை கல்வி பயின்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வர்த்தக துறையில் பட்டம் பெற்று தேசிய அளவில் ஒரு தொழிலதிபராக வாழ்ந்தவர்.

இளமைக்காலத்தில் இருந்தே மக்கள் சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.தனது தந்தையின் சட்டக்கல்லூரி நண்பரான மு.கா ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் சேர் அவர்களினால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒருவர்.2000 ஆண்டுகளில் தனது சமூகத்தின் இருப்பை பாதுகாக்க மு.காவில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் காலடி எடுத்து வைத்தார். 

அஷ்ரப் சேர் அவர்களின் அகால மரணத்தின் பின் தற்போதைய தேசிய தலைமைக்கு ஏற்பட்ட நெருக்கடிகளுக்கும், கட்சியின் தனித்துவத்திட்கும் பங்கம் ஏற்பட்ட வேளைகளில் துணிச்சலுடன் போராடி கட்சியையும், தலைமைத்துவத்தையும் காத்திட்டார். 

பாராளுமன்ற முதல் பிரவேசத்திலேயே இன ஒற்றுமை, தேசிய நல்லிணக்க பிரதி அமைச்சையும், அடுத்த பிரவேசத்தில் வன்னிப் புனர்வாழ்வு அமைச்சையும் வழங்கி அழகு பார்த்தது எம் தாய்க் கட்சி மு.கா.

இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் நல்லாட்சியை 2000ம் ஆண்டளவில் வன்னியில் செய்து காட்டிய மகான். தமிழ் இன மக்களையும் தமிழ் பேசும் சமூகமாக கருதி அனைத்து இன மக்களையும் சரி சமமாக வழி நடத்தி வன்னியில் இரு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று சாணக்கிய அரசியல் செய்த மகான் இன்று எம்முடன் இல்லை. அரசியல் ஒரு சாக்கடை என்ற கூற்றை உடைத்து அரசியலில் கரை படியாத கரங்களுடன் வாழ்ந்து விட்டு இறையடி சேர்ந்தவர் மர்ஹூம் மசூர் ஹாஜியார்.

வன்னி மக்கள் அரசியலில் அனாதையாக்கப்பட்ட நாள் இன்னாரின் மறைவு நாள்.வன்னியில் இன்னாரின் சேவைகள் எண்ணில் அடங்காதவை. மர்ஹூம் நூர்தீன் மசூர் ஹாஜியார் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து இறையடி சேர்ந்து இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.இந்நாளில் அன்னாரின் கப்ர் வாழ்வு சுவர்க்க வாழ்வாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவோமாக. ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
எச்.எம்.ரயீஸ்,
வட மாகான சபை உறுப்பினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -