க.கிஷாந்தன்-
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள 100 தோட்டங்களுக்கான தோட்டத்தில் வாழும் மக்களுடைய விசேட தினங்களுக்காக பாவிப்பதற்கான 30 இலட்சம் ரூபா பெறுமதியான நாற்காலிகளும், கூடாரங்களும் 13.12.2015 அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களால் நோர்வூட் தொண்டமான் மைதானத்தில் வைத்து மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிதியத்தின் தலைவர் புத்தரசிகாமணி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு,முன்னால் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





