ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொழும்பு-12 வாழைத் தோட்டம் அல் - ஹிக்மா அஹதிய்யா பாடசாலையின் 30வது வருட பரிசளிப்பு விழாவும் மாணவர்களுக்கான இலவச பாடசாலை சீருடை வழங்கும் நிகழ்வும் இன்று (13) குணசிங்கபுர பிரதீபா மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் பாஹிம் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமும் விஷேட அதிதயாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கப்பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல், கௌரவ அதிதிகளாக கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சிராஸ் நூர்டீன், நுகர்வேர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி ருஸ்டி ஹபீப், அல்-ஹிக்கமா கல்லூரியின் அதிபர் கே.எம்.எம்.நாளிர் கே.ஆh.எம்.அக்ரம், ஏ.கையூம் லத்தீப் உட்பட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது அஹதிய்யா பாடப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாண, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டதுடன் அணைத்து மாணவர்களுக்கு அஹதிய்யாவின் ஏற்பாட்டில் இலவச சீருடைகளும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் இஸ்லாமிய ஹசீதாக்களும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.




