சமூக நலன்புரிச்சங்கம் - அம்பாறை மாவட்டம் ( சோஷா) நிறுவனத்தின் பரிபாலனையின் கீழ் இயங்கி வருகின்ற மொவி பகல்நேர பராமரிப்பு நிலையத்தின் இவ்வாண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும், அக்கரைப்பற்று சோஷா நிறுவனத்தின் தலைவரும், கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கணக்காளருமான ஜனாப்.எஸ்.எல்.எம்.தாஹிர் அவர்களின் தலைமையில் கடந்த 29.11.2015ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது அக்கரைப்பற்று மொவி முன்பள்ளி மாணவர்களின் கிறாத், ஆங்கிலப்பேச்சுக்கள், பாடல்கள், நடனங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்றுப்பிரிவு சிறுவர் நன்னடத்தை காரியாலயத்தின் நிலையப் பொறுப்பதிகாரி திரு.வீ.திய்வயமூர்த்தி அவர்கள் பிரதம அதிதியாகவும், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஜனாப். ஏ.எல்.நியாஸ் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்ததுடன் இவ்வாண்டு ஆரம்பப்பள்ளிக் கற்கையை நிறைவு செய்த மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் எதிர்வரும் 2016ம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதியும் கடந்த 26.11.2015ம் திகதி முதல் முன்பள்ளி கிளைகள் மற்றும் சோஷா பிரதான அலுவலகத்திலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.








