கிழக்கில் வேதனமின்றி பணியாற்றிய உழியர்களுக்கு நிரந்தர நியமனம்..!

எப்.முபாரக்,அபு அலா -

கிழக்கு மாகாணத்தில் சுமார் 09 வருடங்களாக எந்தவித வேதனமுமின்றி பணியாற்றி வருகின்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

பல வருடங்களாக எந்தவித வேதனமுமின்றி பணியாற்றுகின்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திருகோணமலையிலுள்ள சுகாதார அமைச்சில் இன்று வியாழக்கிழமை(26) நடைபெற்ற கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரிடம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.ஆர்.அன்வர் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர், 'திருகோணமலை மாவட்டத்திலுள்ள சுமார் 30 இளைஞர், யுவதிகள் சுமார் 09 வருடங்களாக வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களிலும் சுகாதாரப் பணியாளர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு நியமனங்கள் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்.

இதற்குப் பதிலளித்த மாகாண சுகாதார அமைச்சர், 'அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் கடந்த பல வருடங்களாக சுகாதாரப் பணியாளர்களாக பணியாற்றுகின்றமை தொடர்பில் அறிந்துள்ளேன். இவர்களுக்கு நியமனங்களை வழங்குவது தொடர்பில் என்னாலான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இந்த விடயம் தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடப்படும்' என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -