தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக தற்போதைய தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
19வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழ், 10 பேரை உள்ளடக்கிய அரசியலமைப்பு சபையினால் தேர்தல்கள், பொதுச் சேவை, பொலிஸ், கணக்காய்வு, மனித உரிமைகள், நிதி, எல்லை நிர்ணயம், இலஞ்சம் மற்றும் ஊழல், தேசிய கொள்வனவு ஆகிய 09 சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் உறுப்பினர்களாக நலீன் அபேசேகர மற்றும் ரத்ன ஜீவன் ஆகியோரின் பெயரிடப்பட்டுள்ளது.
மகிந்த தேசப்பிரிய, கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றை பக்கச்சார்பற்ற முறையில் நடாத்தி முடித்ததன் ஊடாக அனைவரது பாராட்டுக்களையும், இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
