மருதமுனை கவிஞர் விஜிலிக்கு கிழக்கு மாகாண விருது...!

பி.எம்.எம்.ஏ.காதர்-

கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியப் பெருவிழா போட்டி நிகழ்வில் சிறுவர் பாடலுக்கான விருது கவிஞர் மருதமுனை விஜிலிக்கு கிடைத்துள்ளது.

அரச அலுவலகர்களுக்கான படைப்பாக்கற் போட்டியில் ' வானவில் ரசிப்போம்' எனும் தலைப்பினாலான சிறுவர் பாடல் துறைக்கே இவ்விருது வழங்கப்படுகிறது

திருகோணமலை விவேகானந்தாக் கல்லூரியில் (8) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள கிழக்குமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழாவிலேயே இவ்விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

இலங்கை-இந்திய படைப்பாளிகளிடையே யாத்ரா சஞ்சிகை நடத்திய கவிதை போட்டி விருது -பாரதி தமிழோசைக் கழகத்தின் சிறப்பு விருது- கலாசார மரபுரிமை அமைச்சின் தேசிய மட்ட விருதுகள் உள்ளிட்ட பல உயர் விருதுகளை பல தடைவ பெற்ற கவிஞர் விஜிலி 1990 முதல் எழுதி வரும் அதிக கவன ஈர்ப்பைப் பெற்ற கவிஞராவார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -