எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்ட சுயாதின ஊடகவியலாளரும், திருகோணமலை மாவட்டத்தின் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவருமான அப்துல் சலாம் யாசிம் புதன்கிழமை (18) இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற போது எருமை மாடுகளுடன் மோதி பலத்த காயங்களுக்குள்ளாகி மொறவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவிக்கின்றார்கள்.
மொறவெவ ரெட்டவெவவில் உள்ள அவரது விட்டிலிருந்து வேலைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சென்ற போது மொறவெவ இராணுவ பயிற்சி முகாமின் முன்னால் உள்ள வீதியில் புத த்கிழமை (18)இரவு 8.00 வீதியின் குறுக்கால் சென்ற எருமை மாடுகளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தில் போது ஊடகவியலாளருக்கு பற்கள் உடைபட்டுள்ளதோடு வலது காலிலும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஊடகவியலாளர் கொண்டு சென்ற ஊடக உபகரங்களான மடிக்கனணி செயலிழந்துள்ளதாகவும் இச்சம்பவம் பற்றிய விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
