இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி எதிர்வரும் 21ஆம் திகதி, ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்குமென்று அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அடையாள அட்டையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அன்றையதினம் திணைக்களத்தின் பணிகள் நடைபெறவுள்ளது.
முறையாக, முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை அவசியமான ஆவணங்களுடன் கொண்டுவந்து சமர்ப்பிக்கமுடியும். மேலும், தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பியவர்களும் அன்றையதினம் வருகை செய்து தமது சந்தேகங்களை தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும். அன்றையதினம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
இச்சேவைக்காக 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பதாரியின் பெற்றோர் அல்லது உறவினர் உரிய ஆவணங்கள் மற்றும் விண்ணப்பதாரியின் கடிதத்துடன் வந்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியுமென அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
