அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியை இராஜினாமா செய்து கொண்டார்...!

சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டுள்ளார்.

தற்பொழுது அமைச்சர் திலக் மாரப்பனவின் இல்லத்தில் நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் தனது முடிவை அறிவித்துள்ளார்.இதேவேளை அமைச்சர் திலக் மாரப்பனவின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜினாமா கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தற்பொழுது நடைபெற்றுவரும் விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -