அனைத்து வீடுகளிலும் மஞ்சள் கொடி ஏற்றவும் ...!

ரச நிறுவனங்கள் மற்றும் அனைத்து வீடுகளிலும் மஞ்சள் கொடி ஏற்றுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரருக்கு மரியாதை விதமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஜாதி மதம் கடந்து அனைவரும் அன்னாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். 

காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நடத்துவது சம்பந்தமாக இன்று காலை இடம்பெற்ற விஷேட அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 12ம் திகதி பூரண அரச மரியாதையுடன் பாராளுமன்ற மைதானத்தில் நடத்தப்பட உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -