எம்.ஏ. தாஜகான்-
பொத்துவில் பிரதானவீதியில் இன்று பி.ப 5.00 மணியளவில் தனியார் பேரூந்து ஒன்றினால் கலந்தர் என்பவர் விபத்துக்குள்ளானார். விபத்துக்குள்ளான நபரை பொத்துவில் ஆதாரவைத்தியசாலையில் கொண்டு சேர்க்கப்பட்ட பொழுது டாக்டர்களினால் குறித்த விபத்தாளரை இடமாற்றம் செய்வதற்கு எத்தணித்தபொழுதும் அம்பியுலன்ஸ் வண்டிக்கு சாரதியின்மையால் பெரிதும் அவஸ்த்தை நிலையை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது: பொத்துவிலின் அம்பியுலன்ஸ் சாரதி கடந்த வாரத்தினுள் ஓய்வுபெற்று சென்றுள்ள அதே வேளையில் பதிலுக்காக இன்னும் பொத்துவில் ஆதாரவைத்தியசாலைக்கான அம்பியுலன்ஸ் சாரதி நியமிக்கப்படவில்லை.
குறித்த அம்பியுலன்ஸ் சாரதி ஓய்வுக்கு செல்லுவதற்கு 06 மாதத்திற்கு முன்பே தெரிவித்ததாகவும், இன்னும் அதற்குரிய இடத்திற்கு சாரதி நியமிக்க படாமல் இருப்பது குறித்தும் பொத்துவில் மக்கள் ஆதங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று பொத்துவில் வைத்தியசாலையில் அம்பியுலன்ஸ் இருந்தும் சாரதியின்மை பெரும் குறைபாடாகும்.
எனவே வெற்றிடமாகவுள்ள இடத்திற்கு அம்பியுலன்ஸ் சாரதியை உடனடியாக நியமிப்பதற்கு சுகாதார திணைக்களம் முன்வர வேண்டும் என மக்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.
