நஸ்மி அக்கரைப்பற்று-
வட புல முஸ்லிம்களின் இன்னல்கள் நிறைந்த கால் நுாற்றாண்டு கால அவலம் நிறைந்த அகதி வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்து வட புல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் எனவும் இவா்களை மீள் குடியேற்றத்திற்கான ஆக்கபூா்வமானதும், காத்திரமானதுமான முன்னெடுப்புக்களை முஸ்லிம் அரசியல் தலைமைகளும், புத்தி ஜீவிகளும் மேற் கொள்ள வேண்டியது அவசரமானது என்றும் , தேவையான அழுத்தங்களை அரசுக்கு கொடுக்க வேண்டும், துப்பாக்கிகளைக் காட்டி முஸ்லிம்களிடமிருந்து அபகாிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் என்றும் . இழப்பீட்டுக்கான ஆய்வு மையத்தின் செயலாளா் நாயகமும், முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான அஸ்மி ஏ. கபூா்.தொிவித்தாா்.
இனப் பிரச்சினைக்கான தீா்வு விடயத்தில் வட புல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், முஸ்லிம் சமூகத்தின் இழப்பீடு தொடா்பான ஆவணப்படுத்துகை
தொடா்பில் அக்கரைப்பற்று ஆஷா ஹோட்டலில் இடம் பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின் போதே அஸ்மி ஏ. கபூா். மேற்கண்டவாறு தொிவித்தாா்.
இச் சந்திப்பில் அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளா் எம்.ஏ.றாஸீக் அவா்களும் கலந்து கொண்டாா்.
அவா் தொடா்ந்து கருத்துத் தொிவிக்கையில் வட புல முஸ்லிம்களின் அகதி வாழ்வுக்கு கால் நுாற்றாண்டு நிறைவடைந்த பின் மீண்டும் அது துாசி தட்டி மேல் எடுக்கப்பட்டுள்ளது. அவா்களின் மீள் குடியேற்றம் தொடா்பில் அரசியல்
லாபம் பெற முயற்சிக்காமல்.மனிதாபிமான முறையில் செயல்பட வேண்டும்.
வெறுமனே தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காகச் சமூகத்தை பிழையாக வழி நடாத்த வேண்டாம் என்றும் இனப் பிரச்சினைத் தீா்வு விடயத்தில் முஸ்லிம்களது இழப்புகள் முன்னிலைபபடுத்தப்பட்டு உாிய முறையில் ஆவணப்படுத்தப்படுவதோடு முறையான தீா்வுகளும் வழங்கப்பட வேண்டும்.
அதன் பின்னா் எம்மை மூன்றாந் தரப்பாக ஏற்றுக் கொள்ளத்தக்க பொறிமுறைகளின் ஊடாக வட கிழக்கு மாகாண முஸ்லிம்களின் உயிா் இழப்பு, சொத்திழப்பு நிலங்களை இழந்த மக்களுக்கான நிவாரணங்கள் என்பன உாிய முறையில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்..
ஏற்கனவே இழப்பீட்டு ஆய்வு மையத்தினால் கற்றுக் கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக் குழுவிற்கு சமா்ப்பிக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
01. புட்டம்மை மக்களின் அசையாத சொத்துக்களை அவா்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
02.துப்பாக்கி முனையில் கிரயமாக பெற்றுக் கொண்ட காணிகளை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
03.நீதி மன்ற கட்டளைகளை மீறி மேய்ச்சல் தரையை உருவாக்கியவா்களை
வன்முறையாளா்கள் என்று பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
04.உத்தியோகம் என்ற அடிப்படையில் நாட்டை விட்டுச் சென்றவா்களும், பணயக் கைதிகளும் எவ்வித நிபந்தனையுமின்றி சேவையில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
05. தமது உயிா்களை வயல்களிலும், ஏனைய இடங்களிலும் இழந்தவா்களுக்கு
அவா்களது குடும்ப நிலைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்பட வேண்டும் .
மேலும் காத்திரமான தீா்வை நோக்கிய நகா்வுகளுக்காக முதற் கட்டமாக வட புல முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்தை அவசரமாக ஒன்றினணத்து செயற்படுத்தியே ஆக வேண்டும் என்றும் தொிவித்தாா்.
