புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளராக திருமதி. சாந்திநாவுக்கரசன் நியமனம் செய்யப்பபட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தினுடைய இவர் ஊர்காவற்துறை, சண்டிலிப்பாய், யாழ்பாணம் ஆகிய பிரதேசங்களில் உதவி அரசாங்க அதிபராகவும், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளர் மற்றும் பணிப்பாளர் பதவிகளிலும். நிதி இராஜாங்க அமைச்சின் செயலாளராகவும் கடமையபற்றியுள்ள இவர் தற்போது புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் கருத்திட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஏ.எல்.எம்.தாஹிர்,
ஊடகப் பிரிவு,
புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு.