க.கிஷாந்தன்-
மலையகப்பகுதிகளில் (06.11.2015) அன்று பிற்பகல் வேளையில் இருந்து அதிக பனிமூட்டம் காணப்படுகின்றது.
அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதன் காரணமாக வாகனங்களை செலுத்துவதற்கு மிகவும் சிரமமாக காணப்படுகின்றது.
இதனால் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, அட்டன், கினிகத்தேன போன்ற பிரதேசங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் கொழும்பு பிரதான வீதியில் மற்றும் அட்டன் நுவரெலியா வீதியில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றமையால் குறித்த வீதியில் பயணம் செய்யும் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனால் வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது முன் விளக்கை ஒளிரவிட்டு செல்லுமாறு பொலிஸார் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.