இன்று சர்வதேச நீரிழிவு தினம்..!

ஜுனைட்.எம்.பஹ்த்-
2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்
பிரகாரம் சர்வதேச நீரிழிவு தினம் இன்று(14) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சார்ள்ஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 ஆம் ஆண்டில் நீரிழிவு நோய்க்கான இன்சுலின் மருந்தைக் கண்டுபிடித்த பிரட்ரிக் பான்ரிங் என்பவரின் பிறந்ததின நினைவாகவே இந்த நாள் நினைவு கூரப்படுகின்றது.

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலங்கையிலும் சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் இன்று (14) காலை விழிப்புணர்வு பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் ஆரம்பமாகும் இந்த
பாதயாத்திரை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தை
சென்றடையவுள்ளது.

அதனை தொடர்ந்து பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப
வளாகத்தில் நீரிழிவு நோய் தொடர்பான கண்காட்சி இடம்பெறவுள்ளதுடன், இந்த நோய் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெறிவிக்கப்படுகிறது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -