சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த ஒருவர் விளக்கமறியலில்..!

செய்தியாளர்-எப்.முபாரக்
டந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர் மூன்று வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத ஒருவரை இம்மாதம் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது. 

கொட்பே, தீவரகம, பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த குற்றச்சாட்டு வழக்கு திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளையில் குறித்த சந்தேக நபர் நீதிமன்றுக்கு சமூகமளிக்காது தலைமரைவாக இருந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபரை பொலிஸார் செவ்வாய்கிழமை (10) கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ஹயான் மீஹககே உத்தரவு பிறப்பித்தார். 

இச்சம்பவம் பற்றிய மேலதிக. விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -