எம்.ஐ.எம்.றியாஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு இயங்கும் கிம்மா நிறுவனத்தின் ஏற்பாட்டில் இறக்காமம் பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மூவின 50 குடும்பங்களுக்கு இலவசமாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் நீர் இணைப்பினைப் பெறுவதற்கான அனுமதிப் பத்திரங்கள் இன்று(16) இறக்காமம் பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மௌலவி யூ.கே.ஜபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்புத்துறை செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சமூர்த்திப் பயனாளிகளுக்கு இலவச நீர் இணைப்பினைப் பெறுவதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.றசாக் இறக்காமம் பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பீ.எம்.எம.அஸீஸ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறக்காமம் மத்திய குழுவின் உதவித் தலைவர் எஸ்.ஐ.அறுசூன் அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் எதிர் கட்சித் தலைவர் நளீம் மாஸ்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






