முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-
முசலிப் பிரதேசத்தில் உள்ள 30 கிராமங்களினதும் தலைநகர் சிலாவத்துறையாகும். சலாபம் என்பது முத்துக் குவித்து வைக்கப்படும் இடமாகும் இதிலிருந்துதான் சிலாவத்துறை உருவாகி இருக்கலாம். ஒருகாலத்தில் முத்துக்குளித்தலில் இப்பிரதேசம் உலகப் பிரசித்திபெற்றதாகும்.
எகிப்திய இராணி கிளியோப்பட்ரா அணிந்த ஆணிமுத்து முசலி சிலாவத்துறை கடலிலிருந்தே பெறப்பட்டது. இப்பிரதேச முத்துக்குளித்தலை மேற்பார்வை செய்யவே (டொரிக்) அல்லிராணிக்கோட்டை அமைக்கப்படிருந்தது. இது 3 மாடிகளைக்கொண்டது. இன்றும் அது அழிந்தும் அழியாதுமுள்ளது.
யானை ஏற்றுமதியிலும் இப்பிரதேசத்திற்கு தனி இடமுண்டு. மொறோக்கோ யாத்திரிகர் இப்னுபதூதாவும் சிலாவத்துறைப் பள்ளிவாயலுக்கு வந்து சென்றுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது. அரேபிய வியாபாரிகள், தென்னிந்திய வியாபாரிகள் போன்றோரால் சிறப்புற்ற சிலாவத்துறை நகரம் போத்துக்கேயரின் இனவிரோத செயற்பாட்டாலும், ஆங்கிலேயரின் மிதமிஞ்சிய முத்துக்குளித்தலுமே சிலாவத்துறை நகர் வீழ்ச்சியடைந்தது.
பின்னர் வளர்ந்துவரும் சிறிய நகரமாக வளர்ந்த சிலாவத்துறை 89,90 காலப்பகுதியில் வட இலங்கைக்கு கடல்மார்க்கமாகப் பொருட்களைக் கொண்டுவந்து வழங்கியதையும் சரித்திரம் சாதாரணமாக மறக்காது.
சிலாவத்துறை நகரில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளனர்.ஒரு சில தமிழ்க்குடும்பங்களும் வசித்துள்ளன. இங்கு வாழ்ந்தவர்களின் தாய்க்கிராமமாக புதுவெளி விளங்கியுள்ளது. கிராம சபைத்தலைவர்களான, செ.அக்பர் சேர்மன், சே.சுக்கூர் சேர்மன், மு.கா.அ.கபூர் சேர்மன் போன்றோரெல்லாம் புதுவெளித் தொடர்புடையவர்கள்தான்.
சிலாவத்துறை இராணுவமுகாம் மீதான தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பிரதேசமக்கள் இடம்பெயர்ந்து முசலி, புதுவெளி, பண்டாரவெளி போன்ற பகுதிகளில் வசித்துவந்தனர். பின்னர் புலிகளின் இனச்சுத்திகரிப்பின் மூலம் மாவட்டத்தை விட்டே வெளியேறியேறிவிட்டனர். மக்கள் வெளியேறும்போது நூற்றிற்கு உட்பட்ட கடைகள் இருந்தன.
அழகிய பள்ளிவாயலுமிருந்தது
அரச நிறுவனங்கள்.
கிராம சபை(வீ.சி)
மீன்பிடிக்கூட்டுத்தாபனம்
சிலாவத்துறைப்பாடசாலை
வைத்தியசாலை
சீனோர் நிறுவனம்
கிராம மு.சங்கம்
தபால் அலுவலகம்
கூட்டுறவுச்சங்கம்
இராணுவ முகாம்
உதவி அரசாங்க அதிபர் அலுவலகம்
கமநலசேவை நிலையம்
சிலாவத்துறை இராணுவமுகாமிற்கு அருகாமையில் முஸ்லிம் மையவாடிக்காணி இருந்தது. ,
யூனியனிற்கு மேற்கே வாராந்த சந்தை (கொழும்பார் இருந்த இடம்)இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருந்ததுது.
இப்பிரதேசத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்பு இங்கிருந்த இராணுவமுகாம் மூடப்பபட்டது. இதனால் இப்பிரதேசம் கடற்புலிகளின் ஆதிக்கப்பிரதேசமாக மாறியது. வடக்குமீதான இராணுவ நடவடிக்கைமூலம் முதலில்; சிலாவத்துறை மீட்கப்பட்டது.
இங்கு மக்கள் எவரும் இல்லாத நிலையில் சிலாவத்துறைப்பிரதேச முழுக்காணியும் இராணுவ முகாமாக்கப்பட்டது. மக்கள் மீளக்குடியேற வந்தபோது சிறியளவில் காணி விடுவிக்கப்பட்டது. அதில் பாடசாலைக்காணியும், வைத்தியசாலைக்காணியும் அடங்கும். சிலாவத்துறையின் இதயம் விடுவிக்கப்படவில்லை.
பின்னர் இராணுவமுகாம் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுவிட்டது இதனால் காணியுரிமையாளர்கள் மீளக்குடியேறமுடியாமல் தவிக்கிறனர். எவ்வளவோ முயற்சிகள் எடுக்கப்பட்டும் மஹிந்த யுகத்தில் முடியாமல் போனது. வேதனையான விடயமே. சிலாவத்துறை நகர் கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் அரச, தனியார் இருவகை காணிகளும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும்.
நாம் சொல்லவருவது சிலாவத்துறை கடற்படை முகாமை, 1990 இற்கு முன்பு கடற்கரையோரமாக சிலாவத்துறைப் பாடசாலைக்கு தென்கிழக்கே அமைந்திருந்த இராணுவமுகாம் இருந்த இடத்திற்கு பின்நகர்த்தப்பட வேண்டும் என்பதாகும். (இது இருபக்க புரிந்துணர்வு அடிப்படையில் செய்யப்படவேண்டும்)
யாழ்ப்பாண தமிழ் மக்களில் சிலர் தமது காணிகளை விடுவிக்குமாறு உயர் நீதிமன்றில் வழக்காடி மீட்டுள்ளனர்.இதே வழியில் வழக்குத்; தொடராமலிருப்பது பொறுமையா? பலவீனமா....?ஒற்றுமையின்மையா.....?
அரசியல் தலைமைகள் மீட்டுத்தரட்டும் என்ற எண்ணமா....? சமூக உணர்வுள்ள இப்பிரதேச புத்திஜீவிகள் உறக்கமா? நாம் இப்படி இருந்தால் எம் நகரை முழுமையாக எப்போது பார்ப்பது.
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் பாராளுமன்ற உரையுலே முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை, துரித மீள்குடியேற்றம், இனவாதப் பிரசாரங்களை அடிக்கடி முடுக்கிவிடும் த.தே.கூ.இன் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் முஸ்லிம் விரோதப் போக்கு போன்றவற்றையும் தெளிவாக எடுத்துக்காட்டினார்.
குறிப்பாக சிலாவத்துறை காணி விடுவிப்பும் பேசப்பட்டது. பாராட்டத்தக்கது. தேர்தல் கேட்கப் பல கட்சிகளுடாக பலர்வருகின்றனர். பின்னர் காணாமலாகிவிடுகின்றனர். வீட்டுத்திட்டம், காணிபெற்றுக் கொடுத்தல், அரசதொழில் பெற்றுக்கொடுத்தல், பிரச்சினைகளில் பார்வையாளராகாமல் பங்காளராதல், எல்லாம் அமைச்சரின் தனிப் பெரும் ஆளுமை.
வடபுல முஸ்லிம்களின் விடயங்களில் எதிலும் தலையிடாமல் இருத்தல்,பாராளுமன்ற உரைக்கு ஆதரவுகூட அளிக்காமல் இருப்பது பெரும் வரலாற்றுத் துரோகம். வன்னிக்கு அமைச்சர் தலைமையிலே பல்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று உண்மை நிலைமையை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அறிக்கையிட்டு காணிப்பிரச்சினைக்கு முடிவுகட்ட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
